தொண்டமனாறு செல்வசன்னதி கோயில்.
சன்னதி கோயில் எனக்கு பிடித்த இடங்களில் ஒன்று.
அங்கு உள்ள அமைதி என்னை கவரும்
ஒருமாய் ஓடும் தொண்டமனாறு ஆறு
தோய்ந்து குளிக்க என்ன சுகம்.
அதன் பின் அந்த கிணற்று நீர் உடலில் பட ஒரு சிலிர்ப்பு.
நனைந்தும் நனையாமல், துடைத்தும் துடைக்காமல்
கந்தனின் தரிசனம் ஒரு கருணை.
வயிராற, சுவையான உணவு ஆச்சிரமத்தில்
தொண்டர்கள் பரிமாற.
வழிந்து வெளியில் ஓட, பாயாசம் வாழை இலையில்
அது ஓட முன் உறிஞ்சி குடித்து கைகழுவி
கச்சான் கொறித்தபடி அங்கிருந்து திரும்புவது ஒரு கவிதை.
அங்கு அப்பப்ப சென்ற போது எடுத்த வீடியோக்களை தொகுத்து வழங்குகிறேன்
பிடித்தால் பார்த்து பகிருங்கள்.
நன்றி.
எழுத்து
வி.நிஷாந்தன்
www.vnishanthan.online