‘Corona’ ஊரடங்கு சட்டத்தில் கொழும்பு

Date:

தூரத்தில் கத்தும் குயிலின் சத்தம் இதமாக கேட்குது.

வாகன சத்தம் சுத்தமாக இல்லை.

இயந்திர இரைச்சல்கள் மருந்துக்கும் இல்லை.

உபகரணங்களின் ஊறுமல்கள் இல்லை.

உடைக்கும் சத்தம், வெடிக்கும் சத்தம் இல்லை.

Silence மட்டும் சத்தமாக இருக்குது.

இரவிரவாக உழைக்கும் ஊர் உயிரிழந்து கிடக்குது.

றோட்டில் கூவிவிக்கும் வியாபாரிகளின் கூவல் மாயம்.

ஓய்வேடுத்து களைச்சாச்சு. எழுந்து எழுந்து தூங்கியாச்சு.

ரெலிபோன் மணிகள் அடிக்கடி சிணுங்கவில்லை

போனில் கோல் எடுத்தால் ‘கொறோனா’ தான் முதல் கதைக்குது.

ஒவ்வொரு குறுஞ்செய்தியும் நெடும் செய்தியாகுது.

உணவு சிக்கனம் விளங்குது.

ஊரடங்கில் ஊர் மட்டும் அடங்கவில்லை உணவும் அடங்குது.

நகரில் சத்தம் இல்லை நாம் மட்டும் வாழ்வதாக ஒரு உணர்வு

– எழுத்து –
வி.நிஷாந்தன்

www.vnishanthan.online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வண்டுக்கு வந்தது கோவம்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை உணவு தயாரிப்பு என் பொறுப்பில்...

இந்தியாவில் என் கண்ணையும் மனதையும் தொட்டவைகள்

இந்தியாவில் என் கண்ணையும் மனதையும் தொட்டவைகள் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் பிரதான பஸ்...

Jet Plane உம் எங்கட ஊர் மண்ணெண்ணெயும்

காலை நேரம் மணி; 6:45. அது எனது உடற்பயிற்சி நேரம். கொழும்பு...

பேரீச்சம் பழமும் நானும்.

பேரீச்சம் பழம் சாப்பிட்டால் நல்லா மூளை வேலைசெய்யும் வளரும் என்று கேள்விபட்டன் மூன்று...