இந்தியாவில் என் கண்ணையும் மனதையும் தொட்டவைகள்

Date:

இந்தியாவில் என் கண்ணையும் மனதையும் தொட்டவைகள்

  • ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் பிரதான பஸ் நிலையங்களில் பேரூந்துகள்           நிரம்பி வழிந்து புறப்படுகின்றன.
  • மக்கள் சத்தமாகவே கதைத்கிறார்கள் ஒருவேளை இங்கு வாய் நீளமா அல்லது காது கட்டையோ புரியவில்லை.
  • தெருவில் தடக்கி விழுந்தால் Tea கடை, எல்லா Tea கடைகளிலும் கூட்டமாக நின்று கொண்டே Tea குடிக்கிறார்கள், 10 ரூபாவுக்கு Tea, பஜ்ஜி மற்றும் வடை 5 ரூபா  (இந்திய பணம்)
  • தனியார் நிறுவனங்களிலும், தனிப்பட்ட சந்திப்புகளிலும் தனி மனித மரியாதை பொங்கிவழியுது. பேரூந்துகளிலும் பொது இடங்களிலும் அது நொண்டுகிறது.
  • தெருவரை நீண்டு முகம் காட்டும் சாப்பாட்டு கடைகளில் உணவுகளின் சுவையோ Five Star Hotel களை மிஞ்சுகிறது.
  • நாலு சக்கர தள்ளுவண்டிலில் வகை வகையான தோசையும் சுவையான சட்னியும், பஞ்சுபொல் இருக்கும் இட்லியும் சாம்பரும் ரெடியாகுது சுவை நாக்கை தூக்குது. வயிறு நிரம்பி ஏப்பம் வரும் வரை நகர மனம் மறுக்குது.
  • தெருவோர பழக்கடைகள் நடு இரவு வரை திறந்திருக்கிறது. கூட்டம் இருந்து கொண்டுதான் இருக்குது.
  • வாகனத்தில் இருக்கும் horn ஐ அடித்துக்கொண்டு ஓட்டுகிறார்களா இல்லை ஓட்டிக்கொண்டு horn அடிக்கிறார்களா தெரியவில்லை. horn சத்தம் காதை பிளக்குது.
  • வாகனங்களும் மற்றும் சுவர்களும், விளம்பரங்களால் நிரம்புது. தனி நபர் விளம்பரங்கள் அது ஒரு தனி ரகம்
  • வாகனத்தின் முகப்பு கண்ணாடியைவிட வாகனத்தின் பெயர் பலகை அதற்கு மேல் பெரிதாக இருக்கு.
  • வாகனம் ஓட்டும் போது பாதைக்கு குறுக்க வந்தாலோ, அல்லது பிழையாக பக்கம் மாறி பயணித்தாலோ யாரும் முறைப்பதும் இல்லை அதை பெரிதாக அலட்டிக்கொள்வதாதவும் இல்லை.
  • பரபரப்பு குறையாமல் சலிக்காமல் உட்காராமல் நின்றுகொண்டே காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஓயாமல் வேலைசெய்கிறார்கள்.
  • சில முக்கிய பேருந்து நிலையங்களில் சிறுநீர் வாடை தான் முதலில் வரவேற்கிறது.
  • எங்கும் ஒற்றுமையாக மஞ்சள் நிற ஓட்டோக்கள். மக்களை ஏற்றி செல்லும் எல்லா சாரதிகளும் காக்கி Uniform
  • பொலிசார் கூட கெல்மெட் அணிவதில்லை மோட்டார் சயிக்கிள் ஓடும்போது. (காக்க காக்க சூர்யாட்ட சந்திச்சா சொல்லவேணும்)
  • பஸ் கண்டக்டர்கள் கறாராகவும் முறைப்பாகவும் இருக்குpறார்கள். கனிவு என்பது சுத்தமாக இல்லை (எனக்கு எங்கட கொண்டக்டர் அந்தோனி அண்ணைதான் ஞாபகத்தில் வந்தார்)
  • இளநீர் கூட Door Delivery இல் கிடைக்கிறது.
  • பேரம் பேசும் திறமை எல்லாருக்கும் ரத்தத்தில் ஊறி இருக்கிறது. பெண்களிடம் அது பொங்கி வழிகிறது. ஐம்பது ரூபாய்க்காக அரைமணிநேரம் பேரம் பேசுகிறார்கள்.
  • கிட்டதட்ட எல்லோரும் அரசியல் ஆலோசர்களாக இருக்கிறார்கள். அரசியல் பேசியே உயிரெடுக்கிறார்கள்.
  • சரவணாஸ் கடைக்கு சாமான் வாங்க போனேன் அங்கு சிறுநீர் கழிக்க Bathroom சென்றேன்; அதற்கும் பெரும் கூட்டம் line இல் நின்றது….. திரும்பி ஒடியே வந்துட்டன்.
  •  எழுத்து – வி.நிஷாந்தன்   
  • www.vnishanthan.online   நன்றி.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வண்டுக்கு வந்தது கோவம்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை உணவு தயாரிப்பு என் பொறுப்பில்...

Jet Plane உம் எங்கட ஊர் மண்ணெண்ணெயும்

காலை நேரம் மணி; 6:45. அது எனது உடற்பயிற்சி நேரம். கொழும்பு...

பேரீச்சம் பழமும் நானும்.

பேரீச்சம் பழம் சாப்பிட்டால் நல்லா மூளை வேலைசெய்யும் வளரும் என்று கேள்விபட்டன் மூன்று...

‘Corona’ ஊரடங்கு சட்டத்தில் கொழும்பு

தூரத்தில் கத்தும் குயிலின் சத்தம் இதமாக கேட்குது. வாகன சத்தம் சுத்தமாக இல்லை. இயந்திர...