தூரத்தில் கத்தும் குயிலின் சத்தம் இதமாக கேட்குது.
வாகன சத்தம் சுத்தமாக இல்லை.
இயந்திர இரைச்சல்கள் மருந்துக்கும் இல்லை.
உபகரணங்களின் ஊறுமல்கள் இல்லை.
உடைக்கும் சத்தம், வெடிக்கும் சத்தம் இல்லை.
Silence மட்டும் சத்தமாக இருக்குது.
இரவிரவாக உழைக்கும் ஊர் உயிரிழந்து கிடக்குது.
றோட்டில் கூவிவிக்கும் வியாபாரிகளின் கூவல் மாயம்.
ஓய்வேடுத்து களைச்சாச்சு. எழுந்து எழுந்து தூங்கியாச்சு.
ரெலிபோன் மணிகள் அடிக்கடி சிணுங்கவில்லை
போனில் கோல் எடுத்தால் ‘கொறோனா’ தான் முதல் கதைக்குது.
ஒவ்வொரு குறுஞ்செய்தியும் நெடும் செய்தியாகுது.
உணவு சிக்கனம் விளங்குது.
ஊரடங்கில் ஊர் மட்டும் அடங்கவில்லை உணவும் அடங்குது.
நகரில் சத்தம் இல்லை நாம் மட்டும் வாழ்வதாக ஒரு உணர்வு
– எழுத்து –
வி.நிஷாந்தன்
www.vnishanthan.online