ஒரு ஞாயிற்றுக்கிழமை.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை உணவு தயாரிப்பு என் பொறுப்பில் மனைவிக்கு இரு நாள் ஓய்வு (காலை மட்டும்)
எனது காலை உணவு உச்ச கட்ட வீச்சு என்னவென்றால்
– அளவாக உப்பு போட்டு மரவளிக்கிழங்கு அவிப்பது.
– பதமாய் முட்டை அவிப்பது… சரியாக பதமாக உயர்தர கருவாட்டை சுடுவது.
கடமைகளை கச்சிதமாக முடித்தபின்னர்,
குளித்துவிட்டு தலை துவட்டிய ஈரமான துவாவையை உடுப்பு காயபோடும் வெளிமுற்றத்தில் இருக்கும் கொடியில் போடும் போது கண்ணில் பட்டார் இவர்.
சாதாரண வண்டுதானே நகர்ந்து போகமுடியவில்லை… பக்க வாட்டில் பார்த்தேன் அதன் தலையில் கொம்பு.
உடுப்பு காயவிடும் கால் இஞ்சி நைலோன் கயிற்றின் மேல் அமர்ந்திருந்தார்.
அதன் உருவத்திற்கு ஒத்தவாறு அதுவும் அதன் தலையளவில் மொத்தமாக இருக்குது.
மெதுவாக நகர்ந்து அதன் மேல் பக்கத்தை எட்டி பார்த்தன்… அதன் தலையில் ஒரு கொம்பு அல்ல இருண்டு கறுத்த கொம்புகள் அந்த கொம்புகள் கிட்டதட்ட திமில் கொண்டு முறுக்கேறிய காளையின் கொம்புகள் போல் இருந்தது கரும் கறுப்பில்.
என்ன அட்டகாசமான படைப்பு…. என்ன நேர்த்தியான கட்டமைப்பு..
சிறிதோ பெரிதோ ஒரே அளவு கவனம் எடுத்து பக்காவாக படைக்கபடுகிறது.
இயற்கையின் முன் நாம் எல்லாம் எல்லாம் ஒரு புள்ளி கூட இல்லை.
இதை எல்லாம் சிந்தித்தபடி
என் கமராவுடன் நான் தயாராக இவர் இங்கிருக்கமாட்டார். அது விளங்குது
Micro Lens ஐ கழட்டி மாட்டுவதற்குள் இவர் நிச்சயம் பறந்துவிடுவார்.
எட்டி எனது கைத்தொலைபேசியை எடுத்தன் சத்தமின்றி (iphழநெ 7) அதன் auto focus lens
அதுவும் வண்டை சரியாக cover பண்ண முரண்டு பிடித்து… ஒருவாறு ஒத்துழைக்க தொடங்க
வண்டுக்கு வந்துவிட்டது கோவம்,
தன்னை கேட்காமல் போட்டோ எடுத்ததற்கு என்னை பார்த்து முறைத்துவிட்டு
வண்டு அடிப்படை உரிமை மீறல் ஆணைக்குழுவுக்கு சென்றுவிட்டார் முறைப்பாடு செய்வதற்கு.
நன்றி.
– எழுத்து –
வி.நிசாந்தன்
www.vnishanthan.online